CCM High School, Idaiyangudi, Old Student Association

The Old Boys Association has recently celebrated their 93rd Annual day function on 26th December 2016 at CCM High School, Idaiyangudi premises.

கால்ட்வெல் சென்டனரி மெமோரியல் மேல்நிலை பள்ளியின் பழைய மாணவர் சங்கம் தங்களது ஆண்டு விழாவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் தேதி கொண்டடி வருகிறார்கள் . இந்த ஆண்டும் 26-12-2016 அன்று மிக சிறப்பாக கொண்டாடினார்கள். அன்று 9.30 மணி முதல் 12.00 மணி வரை விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. தொடர்ந்து. சேகர குரு Dr சந்திரக்குமார் அவர்கள் ஆரம்ப ஜெபத்துடன் தொடங்கி வைத்து பேசினார்கள் . விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜே .ராஜராஜன் அவர்கள் வருகை தந்தார்கள். சங்க தலைவர் திரு ஜி பாலசுப்ரமணியன் அவர்கள் விருந்தினர்களையும் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 93 வது ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டது. திரு. போனிப்பாஸ் அவர்கள் மலரை மிக்க நன்றாக தயாரித்ததற்காக பாராட்டுக்களை பெற்றார்கள். கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அனைவரும் மதிய விருந்தில் கலந்து மகிழ்ந்தனர்.

No Comments Yet
You must log in to post a comment.


